சென்னை வீரர் பதிரனா உருக்கம்!

10 அணிகளுக்கிடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 5 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் விளையாடிய சென்னை அணியின் தலைவரான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்த நிலையில், சென்னை கடைசி இடம் பிடித்தது தொடர்பாக சென்னை அணி வீரர் பதிரனா கூறியதாவது,

நாங்கள் எதிர்பார்த்த தொடராக இது அமையவில்லை. ஆனால், இந்த ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது. அது சென்னை ரசிகர்களின் அன்பும், ஆதரவும். என் மீது நம்பிக்கை வைத்த அணிக்கும், நிர்வாகத்திற்கும், ஒவ்வொரு ஆதரவாளருக்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன். என தெரிவித்துள்ளார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த