சென்னை அணியில் மற்றுமொரு புதிய வீரர் இணைவு!

IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக
தென்னாபிரிக்க அணியின் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் குர்ஜப்னீட் சிங் உபாதை காரணமாக முழுமையான IPL தொடரிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக டெவால்ட் பிரேவிஸ் வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான அடிப்படை தொகை 75 இலட்சமாக (இந்திய ரூபாய்) இருந்த போதும்,
2.2 கோடி ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இவரை ஒப்பந்தம்
செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

டெவால்ட் பிரேவிஸ் இதற்கு முதல் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ்
அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியிருந்தார் என்பதுடன்,

இறுதியாக நடைபெற்ற SA T20 தொடரிலும் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை ஏற்கனவே அணித்தலைவர் ருதுராஜ் கைக்வாட்டிற்கு
பதிலாக இளம் வீரர் ஆயுஸ் மாத்ரேவை ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

download

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜப்பான் இராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில்

unnamed (Custom)

மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி!

நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதென்பது

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு