சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக வைத்தியர் நிஹால் அபேசிங்க!

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (22) கூடிய சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன.

இதற்கமைய தலைவர் பதவிக்கு வைத்தியர் நிஹால் அபேசிங்க அவர்களின் பெயர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பரினால் முன்மொழியப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார்.

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை