சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் குறித்து நேற்றைய (25) வர்ணனையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று அஹமதாபாத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியின்போது சுரேஷ் ரெய்னா, சஞ்சய் பங்கர் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் வர்ணனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளர் வரவிருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
உடனிருந்த ஆகாஷ் சோப்ரா, அவரின் பெயர் ’எஸ்’ என்ற எழுத்தில் தொடங்குமா? என்று கேள்வி எழுப்பினார். சிரித்துக்கொண்டே பதிலளித்த ரெய்னா, அவர் சென்னை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர் என்று தெரிவித்தார்.
கடந்த 2008 முதல் 2021 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 205 போட்டிகளில் 5528 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவரை ’சின்ன தல’, ’மிஸ்டர் ஐ.பி.எல்’ என்று ரசிகர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது.