சிறுமி துஷ்பிரயோகம் – ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு 17 வருடம் கடூழிய சிறை!

07 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம் குற்றவாளிக்கு 30,000 ரூபா தண்டப்பணமும் விதித்தது. செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒருவருடம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 03 இலட்சம் ரூபா இழப்பீடு மற்றும் அவரது தாய்க்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனைக்குள்ளான நபர் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையென தீர்ப்பை வழங்கும் முன்னர் அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அவ்வாறான தந்தையொருவர் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டமைக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க