சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மூவர் கைது!

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா, பட்டித்தோட்டத்தை சேர்ந்த வேனுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்றுகூடிய மக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் பல மாதங்கள் கழித்து மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட மூவரை மன்னார் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்