சக்கரை நோயாளர்கள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டுமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது.

ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

100 கிராம் எடையுள்ள மாம்பழத்தில் கிட்டத்தட்ட 60 கலோரிகள், 2 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவிலான சர்க்கரை உள்ளது.

மேலும் இதில் விட்டமின்கள் A, B6, C, E, மற்றும் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.

51 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள பழம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை உட்கொள்ளலாம்.

இருப்பினும், மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதன் பழுத்த நிலையை பொறுத்து மாறுபடும்.

நன்றாக பழுத்த மாம்பழம் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவையும், குறைவாக பழுத்த மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கும். எனவே, மிகவும் பழுத்த மாம்பழங்களை சாப்பிடக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மாம்பழம் சாப்பிடும்போது அன்று சாப்பிடக்கூடிய மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

அத்துடன் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள உணவுகள், குறைந்த கிளை செமிக் இன்டெக்ஸ் உள்ள பெர்ரி, கிவி போன்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மாம்பழம் உண்ட பின்னர் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் சற்று தாம திக்கப்படும்.

மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிக்கக்கூடாது. மாம்பழத்தை காலையில் 11 மணிக்கு ஒரு இடைப்பட்ட உணவாகவோ அல்லது மாலை வேளையிலோ சாப்பிடலாம். பெரும்பாலும் கார்போஹைட்ரேட் நிறைந்த மதியம் அல்லது இரவு உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சர்க்கரை நோயாளிகள் இரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்த பிறகு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் மாம்பழம் சாப்பிடக் கூடாது. 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய மாம்பழத்தில் பாதி சாப்பிடலாம்.

மாம்பழங்களை சாப்பிடும்போது கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பாதாமி, அல்போன்சா வகை மாம்பழங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு