18ஆவது ஐ.பி.எல். தொடரில் இதுவரை 60 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஓப் சுற்றிலிருந்து பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நிகிடி விலகியுள்ளார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கு தயாராகும் பொருட்டு அவர் தாயகம் திரும்பவுள்ளார்.
அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளரான முசரபானியை பெங்களூர் நிர்வாகம் மாற்று வீரராக அறிவித்துள்ளது.