இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது 14 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்ததையடுத்து பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோஹ்லி செய்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை விராட்கோஹ்லி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி9230 ஓட்டங்களையும் 30 சதங்களையும் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.