தென் கொரியகடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நேற்றையதினம் வருகைதந்த குறித்த கப்பலைக் கடற்படை மரபுகளின் படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
149.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், 262 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
கப்பலில் வருகை தந்தவர்கள் நாட்டின் சுற்றுலா தளங்களைப் பார்வையிடவுள்ளதுடன், நாளையதினம் குறித்த கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.