கொழும்பு மாநகர சபையில் யாருக்கு ஆதரவளிப்பது; ஐ.ச.கூ உயர் சபை கூட்டம்!

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையும், உயர் பீடமும் நாளை கொழும்பில் கூடவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

சமீபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவையும் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்கவுடனும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவையும் சந்தித்து கலந்துரையாடினோம். அதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எல்லோருடனும் எங்களுடைய கொள்கைகளை விளக்கியுள்ளோம். யாருக்கு ஆதரவளிப்பது என்பதை நாளை கூடி தீர்மானிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க