கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க பணிப்பு!

இந்த ஆண்டுக்குள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 50% கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் கட்டுமானத்தில் உள்ள துறைமுக கிழக்கு முனையத்தின் அவசர ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்று திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர்.

2014 முதல் 2022 வரை எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்த கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகள் 2022 முதல் மந்த நிலையில் இருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், கிழக்கு முனையம் (ECT) துறைமுக ஊழியர்களால் வென்றெடுக்கப்பட்ட ஒரு சொத்து என்றும், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் மிகவும் திறமையான மற்றும் நவீன முகாமைத்துவ கட்டமைப்புடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க