நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பேருந்தில் இருந்து பல மணி நேரங்களுக்குப் பின் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று அதிகாலை 4.30 அளவில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்குண்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.