கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் அவசர தீர்மானம்!

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சந்தேகநபர்களாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் அல்லது ஆசிரியர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்புப்பட்டு செயலாற்றக் கூடாது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக உள்ளக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும்போதே பாதிக்கப்பட்ட மாணவிக்கு மேலும் சிக்கலை ஏற்படாத வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பில் இடம்பெறும் இதுபோன்ற துஷ்பிரயோகங்கள் குறித்து நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அவ்வாறான சம்பவங்கள் குறித்து தகவல்களை மூடிமறைக்காமல் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு விரைந்து அறியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த அதிகார சபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் விளக்கமளித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

download

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜப்பான் இராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில்

unnamed (Custom)

மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி!

நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதென்பது

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு