கெஹெலிய வீட்டுப் பணிப்பெண் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.

சுகாதார அமைச்சகத்திற்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த பணிப்பெண், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு புதன்கிழமை (11) அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த