கர்பிணித் தாயொருவருக்கு குழந்தை பிறக்குமென வைத்தியர்கள் அறிவித்திருக்கும் நிலையில் குறித்த தாய் தனது கணவரால் தூக்கிட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவொன்று பதிவாகியுள்ளது.
மாத்தறை மாவட்டம் தெனியாய விகரயென EW பிரிவு என்சல் வத்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட நிஷாந்தினி வயது 25என்ற கர்பினித் தாய் ஒருவரே தனது கணவனால் கொலை செய்ய பட்டு தூக்கில் இடப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பு இன்று அந்த குழந்தை பிறப்பதுகான திகதி வைத்தியர்களால் கொடுக்க பட்டு உள்ளது. இருந்தும் கணவன் மனைவியின் முரண்பாடால் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது வயிற்றில் உள்ள குழந்தையின் விபரம் பற்றிய எந்த தகவலும் இதுவரை இல்லை.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.