கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா!

நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியதானதெனவும் தெரிவித்தனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக அரசியல் பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் நம்பத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலம் சரிவிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் பின் உயர்வடைந்துள்ளது. அதுவேளை,நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகளின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த