காஸா மக்களை லிபியாவில் குடியேற்ற ட்ரம்ப் திட்டம்

காஸாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அங்குள்ள பலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் காஸா பகுதியில் இருந்து 10 இலட்சம் பலஸ்தீனர்களை நிரந்தரமாக லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

மேலும் பலஸ்தீனர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, ட்ரம்ப் நிர்வாகம் லிபியாவிற்கு கோடிக்கணக்கான டொலர் நிதியை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், பலஸ்தீனர்களை லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்