காஸாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மோல்டா அரசு தெரிவித்துள்ளது.
மோல்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் பயணித்துள்ளனர்.
அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மோல்டா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கப்பல் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், மூழ்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு இதேபோன்று காஸாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல்- துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.