காஷ்மீர் தாக்குதல்தாரிகள் இலங்கையில் ஊடுருவலா? – விசேட தேடுதல்!

இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 122 விமானத்திலேயே இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விமானம் இன்று காலை 11:59 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இந்திய பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர்கள் சிலர் குறித்த விமானத்தில் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த விமானத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னிட்டு அமுல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 308 விமானம் தாமதமாகியுள்ளது.

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை

download (31)

அமெரிக்காவின் தாக்குதல் எண்ணெய் போர் வெடிக்கலாம் – கனடாவின் முன்னாள் ராணுவ பிரதானி எச்சரிக்கை!

அமெரிக்காவின் தாக்குதல் மூலமாக இடைக்கால நிம்மதியை பெறலாம் அல்லது எண்ணெய் போர் வெடிக்கலாம் என கனடாவின் முன்னாள் ராணுவத் தலைவர்