நடைபெற்று முடிந்த கனேடிய பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறாத கனேடிய பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னதாக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் கனேடிய அரசியல் ஆய்வாளரும் விமர்சகருமான ஜேம் வோட்ஸ் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாக பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைத்தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் பலமான ஆட்சியை மாத்திரமே கருத்தில் கொள்வார் என்பதால் தற்போதைய பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சி பலவீனமானதாக அமைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதற்காக கார்னி அரசாங்கம் NDP – புதிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களது ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அவர்களுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு கெபினட் உள்ளிட்ட அந்தஸ்த்துக்களை வழங்கி தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த இணைவை பாதுகாப்பதற்கான பல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை இருதரப்பினருக்கும் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், சபாநாயகர் தெரிவின் போது லிபரல் கட்சி அல்லாத ஒருவரை நியமித்து அரசாங்கத்தை மேலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.