காத்தான்குடி கடற்கரை வீதியில் பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் புதன் கிழமை (07) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த பாதணிகள் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
மொஹமட் லாபீர் என்பவருக்கு சொந்தமான இந்த பாதணி விற்பனை நிலையம் தீப் பற்றி எரிவதைக் கண்ட பொது மக்கள் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு இந்த தீ பரவல் தொடராமல் தீயை அணைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் பிரிவினர் காத்தான்குடி நகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் இந்த தீப் பரவல் காரணமாக குறித்த பாதணி விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது .
இதனால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான பாதணிகள் உபகரணங்கள் முற்றாக எரிந்து செய்தமடைந்துள்ளதாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் தீப் பரவலுக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.