கம்பளையில் 22 கோடி ரூபாய் கொள்ளை: மூவர் சிக்கினர்!

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, கண்டி   குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம், கோடீஸ்வரர் வர்த்தகரின் வீட்டுக்குள் வைத்து, மே 8 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இந்த தொழிலதிபருக்கு இருபத்தி நான்கு காரட் தங்க பிஸ்கட்டை கொடுத்து அதன் தரத்தை சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, தொழிலதிபர் அதை ஆய்வு செய்தபோது, ​​அது உண்மையான இருபத்தி நான்கு கேரட் தங்கம் என்பது தெரியவந்தது.

பின்னர் சந்தேக நபர்கள் தங்களிடம் இதுபோன்ற 15 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாகவும், அவற்றுக்கு 220 மில்லியன் ரூபாய்  (22 கோடி) தேவைப்படுவதாகவும் தொழிலதிபரிடம் தெரிவித்தனர்.

அதன்படி, தொழிலதிபர் தனது மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜீப்பையும், வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் நகைகளையும் அடமானம் வைத்து, மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இருபத்தி இரண்டு மில்லியன் ரூபாய்களை கடன் வாங்கியுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபடி, 8 ஆம் திகதி, 8 நபர்கள் ஒரு வேனில் வந்து, தொழிலதிபரின் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை கவனமாக வேறொரு வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, தொழிலதிபரிடம் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த கண்டி   குற்ற விசாரணைப் பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த