அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவிற்கான ஏற்றுமதிகளுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்த நிலையில், இதற்கான எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து கனடிய அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வரி விதிப்பு எதிர்வரும் முதலாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பாதிக்கப்படக்கூடிய தரப்புகளுக்கு நிவாரணங்களை வழங்குவதை கனடிய மத்திய அரசு பரிசீலித்து வருகின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கு ஒப்பாகவே, இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாக கனடிய அரசு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், கனடாவின் குடிவரவு கொள்கைகள் குறித்து ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகள் கனடா வழியாக அமெரிக்காவில் பிரவேசிக்கின்றனர் என்றும், கனடா அதை தடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தது.