கனடா போஸ்ட் மற்றுமொரு போராட்டத்திற்கு முஸ்தீபு!

ஆண்டுக்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான கடிதங்களையும் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பொதிகளையும் கையாளும் 55,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட Canadian Union of Postal Workers தொழிற்சங்கம் திங்கட்கிழமையன்று வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது வேலை நிறுத்தமாக இது அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நிர்வாகத்திற்கு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதாக Crown corporation தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் முடியும் வரை புதிய பொருட்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது அதே நேரத்தில் ஏற்கனவே உள்ளவை பாதுகாப்பாக இருக்கும் ஆனால் விநியோகிக்கப்படாது என்று கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மற்றும் December மாதங்களில் குளிர்கால விடுமுறைக்கு முன்னர் மிகுந்த கப்பல் பருவ காலத்தில் 32 நாள் வேலைநிறுத்தம் மில்லியன் கணக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை தேக்கமடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.

158 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் $845 மில்லியன் இழப்பைச் சந்தித்திருந்தது. கனடா போஸ்ட் இன் எதிர்காலம் குறித்த பரந்த கேள்விகளுக்கும் மத்தியில் தொழிலாளர் நெருக்கடியையும் நிலைத்திருப்பதற்கான போராட்டத்தையும் எதிர்கொண்டுள்ளது.

மத்தியரசின் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கிய William Kaplan எழுதிய 162 பக்க ஆய்வறிக்கை, கிராமப்புற தபால் நிலையங்களை மூடுதல் மற்றும் சமூக அஞ்சல் பெட்டி மாற்றங்கள் மீதான தடைகளையும் நீக்குதல் போன்ற சிபாரிசுகளை பரிந்துரை செய்தது. ஆனால் அறிக்கையின் பெரும்பாலான சிபாரிசுகளை தொழிற்சங்கம் நிராகரித்திருந்தது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த