கனடாவில் பாதுகாப்பு படைகளின் வேதனத்தை அதிகரிக்க முஸ்தீபு!

மன அழுத்தத்தை தரக்கூடிய வர்த்தகங்களுக்கான bonus உட்பட, ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் David McGuinty யின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்து தேசிய பாதுகாப்புத் துறையும் கனேடிய ஆயுதப்படைகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அத்துடன் மன அழுத்த வர்த்தகங்களுக்கான retention bonus இளைய உறுப்பினர்களுக்கான தொடக்க சம்பள அதிகரிப்பு மற்றும் பரந்த அளவிலான சம்பள உயர்வு போன்ற விடயங்களும் ஆராயப்படுகின்றன.

கனேடிய ஆயுதப் படைகளுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான McGuinty யின் அறிவிப்பு பாதுகாப்பு தரப்பினரிடையே பாராட்டைப் பெற்றிருந்தாலும், அது சிலரின் விமர்சனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Liberal அரசாங்கம் சம்பள உயர்வு குறித்து ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட விதம் ஆபத்தானது. ஏனெனில், இது எவ்வாறு செயற்படுத்தப்படும் மற்றும் இதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் என்பன உடனடியாகக் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அத்துடன் இது இராணுவ உறுப்பினர்களிடையே குழப்பத்திற்கும் முழுமையான சம்பள உயர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்க வழிவகுத்தது.

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது, ​​பிரதமர் Mark Carney, இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், இராணுவ ஊதியத்தை அதிகரிக்கவும் உறுதியளித்தார். அவரது தேர்தல் வாக்குறுதியில் உள்ள மிகப்பெரிய ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்க அளவு தேசிய பாதுகாப்புக்கும் செல்கின்றன.

கனடா தனது NATO பாதுகாப்பு செலவின உறுதிப்பாட்டை தற்போது நிறைவேற்ற எதிர்பார்க்கும் நிலையில், இந்த நிதியாண்டில் தேசிய பாதுகாப்பிற்கு 9 பில்லியன் டொலர் ரொக்கமாக செலுத்தப்படும் என்று பிரதமர் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக