கனடாவில் இனவழிப்பு நினைவகம் அமைப்பு – சுயநல நோக்கம்!

“ஆட்சியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தால் புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.” – என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவில் இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் தொடர்கின்றன. எனவே, புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கில் மீள தலைதூக்குவதற்குரிய சாத்தியம் உள்ளதா

“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் வாக்கு வேட்டைக்காக, தனி இராஜ்ஜியம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை இன்றளவிலும் வழங்கிவருகின்றனர். சுயநிர்ணய உரிமை பற்றி கதைக்கின்றனர்.

அப்படியான விஷக்கிருமிகள் இருக்கும் நிலையில், நாட்டில் பலவீனமான தலைவர் உருவாகி, நாடு பலவீனமாகி, வீழ்ச்சியடைந்தால் நிச்சயம் அப்படியான பிரச்சினைகள் எழுவதற்குரிய சாத்தியம் உள்ளது.” – என்றார்.

படை குறைப்பு தொடர்பில் மேற்படி ஊடகம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு,

“ எமது நாட்டு தேசிய பாதுகாப்பு என்பது ஐஎம்எப்பின் பொறுப்பு அல்ல. அது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.படை குறைப்பு யோசனையுடன் உடன்பட முடியாது.” – என்று பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்தார்.

கனடா இனவழிப்பு நினைவகம் பற்றியும் பொன்சேகாவிடம் வினவப்பட்டது.

“ சில தமிழ் டயஸ்போராக்கள் விசாவுக்காகவும், தமது வியாபாரத்தை விஸ்தரித்துக்கொள்வதற்காகவும் இலங்கையில் கொடூமைகள், சித்திரவதைகள் நடப்பதாகக் கூறிவருகின்றனர். தாம் இலங்கைக்கு சென்றால் இன்னல்களை சந்திக்க நேரிடும் எனக்கூறி அதற்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தற்போதைய அரசாங்கம்போலவே கடந்தகால அரசாங்கங்களும் நிராகரித்துள்ளன.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க