இலங்கையில் இன்று (11) ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்து பெண் ஒருவரினால் தடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணிற்கு பாராட்டு குவிந்துள்ளது.
இன்று காலை கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 5.30 மணியளவில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை நபர் ஒருவர் தெரியப்படுத்தும் வகையில் குறித்த பெண் சிவப்பு சட்டையுடன் ஓடியிருந்தார்.
இதனை அவதானித்த புகையிரத ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.