கண்டியில் திமிங்கில வாந்தியுடன் மூவர் சிக்கினர்!

கண்டி மாவட்டம் வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவின்ன பிரதேசத்தில் திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி கட்டுகஸ்தோட்டை, வெலிகந்த மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 43, 57 மற்றும் 63 வயதுடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் வத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்