கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற வேண்டும்!

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்த உட்பட கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை, முதல்வர் வேட்பாளர் விஜய் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,