ஓய்வு அறிவித்தார் விராட் கோலி!

இந்திய வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் கோஹ்லியிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

“அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரவிருப்பதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், கோலி இன்னும் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை” என்று பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பணியாற்றிய ரோஹித் சர்மா, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தியாவுக்காக 210 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோஹ்லி, தற்போது 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

ஒரு இன்னிங்ஸுக்கு சராசரியாக 46.85 ரன்கள் எடுக்கும் கோலி, 30 சதங்களையும் 31 அரைசதங்களையும் குவித்துள்ளார்.

 

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு