ஒரு நாள் வாகனப் புகைப் பரிசோதனை சேவை நிலையம் ஆரம்பம்!

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணிப்பகுதியில் ஒருநாள் சேவையாக வாகானப் புகைப்பரிசோதனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது கோரிக்கையை ஏற்று மக்கள் எதிர்நோக்கிய இடர்பாட்டைத் தீர்க்கும்வகையில் நெடுங்கேணியில் வாகனப் புகைப்பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியா – வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் வாகனப் புகைப்பரிசோதனை நிலையமொன்று இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் பெருந்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நெடுங்கேணியில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையமொன்றினை அமைக்க வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நெடுங்கேணியில் வாரத்தில் ஒருநாள் சேவையாக வாகனப் புகைப்பரிசோதனை நிலையம் இயங்கிவருவதாக, இன்று (11) இடம்பெற்ற இவ்வருடத்திற்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமது கோரிக்கையை ஏற்று நெடுங்கேணிப்பகுதி மக்கள் வாகனப் புகைப்பரிசோதனை மேற்கொள்வதில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிய இடர்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க