ஐ.பி.எல் மீண்டும் ஆரம்பம்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.

இத்தொடரில் இன்னும் 13 லீக் உட்பட 17 போட்டிகள் எஞ்சியுள்ளன.

இந்நிலையில், போர்பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி ஆரம்பித்தாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25ஆம் திகதிக்கு பதிலாக ஜூன் 3ஆம் திகதி நடைபெறுகிறது.

இதனிடையே சர்வதேச போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதால் சில வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு வீரர்கள் குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி சாம் கர்ரன், ஜேமி ஓவர்டான் ஆகிய இருவரை தவிர மற்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மீண்டும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க