ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்!

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாடு பலஸ்தீன நாட்டின் காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கிருந்த மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அண்மையில் வெளியான தகவலின்படி, உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. உணவு வாகனங்கள் செல்லாவிட்டால், பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காஸாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர்,தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

காஸாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களுக்கும் அகதிகள் முகாமிலும் வாழ்வதை பார்க்க முடியவில்லை என்றும் கவலையை வெளிப்படுத்தினார்.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு