‘ஐயமிட்டுண்’ செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் உயர் கௌரவம்

கடந்த பல வருடங்களாக  தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற வளாகத்தில் உயர் கௌரவம் வழங்கும் நிகழ்வை அவரது  யாழ்ப்பாண பல்கலைக் கழக சகாவும் நெருங்கிய நண்பருமான மாகாண அரசின் பாராளுமன்றச் செயலாளர் லோகன் கணபதி கடந்த வாரம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அன்றைய தினம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கு கொடையாளர் செல்வராஜா அவர்க்ளை முன் எற்பாடுகள் செய்த வண்ணம் அழைத்திருந்த லோகண் கணபதி அவர்களை  கௌரவிக்கும் முகமாக   சபை நேரத்தில் சபாநாயகரின் முன் அனுமதி பெற்றும் அவர் பற்றிய அறிமுகத்தை சிறப்பாகச் செய்த போது அங்கு அமர்ந்திருந்த ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆசனங்களில் இருந்த அங்கத்தவர்கள் உட்பட அனைவரும் கரகோசம் செய்து அவரைப் பாராட்டினார்கள். அதன்பின்னர் பல அமைச்சர்களுக்கு செல்வராஜா அவர்களை நேரடியாக அறிமுகம் செய்த லோகன் கணபதி அவர்கள் மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அமைச்சர்கள் பலர்  செல்வராஜா அவர்களை மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தார்கள்.

கனடாவின் ஒன்ராறியோவின் சட்டமன்றத்திற்கு ஐயமிட்டுண் புகழ்  செல்வராஜா   அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் இலங்கையில் பாதிக்கப்பட்ட அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும்  பாடசாலை  மாணவர்களுக்கு ஊட்டச்சத்து   நிறைந்த உணவு மற்றும் கல்வி கற்பதற்கு  தேவையான உபகரணங்கள் ஆகிய இரண்டையும் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளார் என்பதும் அதன் காரணமாக அவர்கள் அவுஸ்த்திரேல0ியா அரசாங்கத்தால்   ORDER OF AUSTRALIAஎன்னும் உயர் கௌரவமும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செல்வராஜாவின் சிறந்த சமூக சேவையை அங்கீகரிப்பதில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற இணைந்த  மாகாண முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏனைய அங்கத்தவர்கள் ஆகியோருக்கும் திரு லோகன் கணபதி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் அவுஸ்த்திரேலியாவின் ORDER OF AUSTRALIA என்னும் உயர் கௌரவத்தை தனது மக்கள் சேவைக்காகப் பெற்ற செல்வராஜா அவர்களின் இந்த ‘ஐயயமிட்டுன்’ மனித நேயப் பணியானது இலங்கையின் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளும் விரிவாக்கப்பெற்று அத்துடன் இந்த பகுதிகளில் மாணவர்களின் கல்வியறிவை ஊக்குவிப்பதற்காக  கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பரீட்சைகளை நடத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கே காணப்படும் படங்களில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்களினால் திரு செல்வராஜா அவர்கள் பாராட்டப்பெறுவதையும் தொடர்ந்து மார்க்கம் நகரில் இடம்பெற்ற ஒரு சந்திப்பு நிகழ்வின் போது ‘உதயன்’ பத்திரிகை பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் லோகன் கணபதி ஆகியோருடன் ஐயமிட்டுண் புகழ்  செல்வராஜா  காணப்படுவதையும் பார்க்கலாம்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு