ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் சுமார் 5 தொன்களை கடந்த 5 மாதங்களில் கைப்பற்ற முடிந்துள்ளது எனபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது நூறு வீத முன்னேற்றமாகும். நாட்டுக்கு கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கைப்பற்றும் விடயத்தில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கைக்குள் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். குறித்த போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்காகவும் விற்பனை நோக்கத்துக்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் அதிகமானவை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகளவிலான கடத்தல்கள் இந்த நாடுகளில் இடம்பெறுகின்றன.இலங்கைக்குள் பயன்பாட்டுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..