2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் ஏற்றுமதி மூலமாக 1,242 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அது 8 சதவீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சேவை ஏற்றுமதியில் 665 அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதுடன் 6.5 சதவீதம் அதிகரிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அந்த மாதத்தில் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதியில் 1,637 அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.