“எதற்கும் தயாராக இருங்கள்” – டக்ளஸ் தேவானந்தா!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உறுதியுரை எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈ.பி.டி பி. கட்சியின் கொள்கையும், கட்சியினால் வலியுறுத்தப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தினை ஆரம்பமாகக் கொண்ட அரசியல் தீர்வு வழிமுறையுமே சாத்தியமானது என்பதை அண்மைய அரசியல் நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொட்டும் பார்க்க மாட்டோம். என்றெல்லாம் முழங்கியவர்கள், எதனை மறுத்தார்களோ அவற்றை ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்கின்றார்கள்.

எனவே எமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் ஆழமாக கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோன்று, எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களும் அடிப்படைகள் அற்றவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

தற்போதுகூட, யாழ்ப்பாணத்தினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவாக கைதுசெய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

ஆளுந்தரப்பினர் நினைத்தால் விரும்பியவாறு விசாரணைகளை மேற்கொள்ளலாம், எமக்கு எதிராகவும் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

எமக்கு எதிராக அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்குமே தவிர, உண்மையாக இருக்காது.

எவ்வாறாயினும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாரான மனோநிலையுடன், எமது அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு