அதிக ஆதரவைப் பெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா – பெரியாற்றுமுனை பகுதியில் தங்களது கட்சியினூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவித்தார்.