உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி- இந்தியா சோதனை!

இந்தியா உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவியை வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விட்டு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஷியோபூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவியை, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது.

இது குறித்து புகைப்படங்களை வெளியிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியிருப்பதாவது: 17 கிலோமீற்றர் உயரத்திற்கு அதிநவீன கருவியை வானில் பறக்கவிட்டு, முதல் விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது. உளவுத்துறை, கண்காணிப்பை மேம்படுத்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உளவு தகவல் சேகரிப்புக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது ஒரு மைல்கல் என டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க