2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் துணை தலைவராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், அவுஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஒதுங்கி இருந்த ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீண்டும் விளையாடவுள்ளார்.
பேட் கம்மின்ஸ் (தலைவர்), ஸ்டீவ் ஸ்மித் (துணை தலைவர்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குன்னமென், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர். என்பவர்களே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் விளையாடவுள்ளனர்.