ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30,78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ.18,46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.