உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா!

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது.

ஜப்பானை மிஞ்சி இந்தியா உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய உருமாற்ற இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்., சுப்பிரமணியம் நேற்று (25) இதை அறிவித்தார்.

இந்தியா தற்போது 4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், IMF தரவுகளின் அடிப்படையில், இந்தியா தற்போது ஜப்பானிய பொருளாதாரத்தை விட பெரியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இந்தியாவை விட பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதோடு தற்போதைய திட்டங்கள் தொடர்ந்தால், அடுத்த இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரநாடாக மாற முடியும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

download

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜப்பான் இராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில்

unnamed (Custom)

மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி!

நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதென்பது

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு