கடந்த இரு தசாப்தங்களாக உலகின் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெருங்கடல்கள் இருண்டு போயுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிளைமௌத் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
கடல் கருமையாதல் என்பது கடலின் மேல் அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒளியின் நீர் ஊடுருவும் திறன் குறைவதைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதிகரித்த பாசி வளர்ச்சி ஆகியவை இந்த நிகழ்வுக்கு நேரடியாக பங்களிப்புச்செய்கின்றன.
இதேவேளை மழைப்பொழிவு மூலம் நிலத்திலிருந்து கடல் நீரில் விவசாய இரசாயனங்கள் மற்றும் வண்டல்கள் கலப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.