உயிருக்கு அச்சுறுத்தல்; டாக்டர் சவீன் செமகே இராஜினாமா!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணை‍‍க்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி அவரது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார்.

மே 9 ஆம் திகதி இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் அரை மணி நேரம் இரண்டு பேர் அவரது வீட்டுப் பகுதிக்குள் நுழைந்து சுற்றித் திரிவதை, வீட்டில் உள்ள சிசிரிவி காட்சிகள் காட்டுகின்றன.

டாக்டர் செமகே உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் அவர்கள் எட்டிப்பார்ப்பதையும் காண முடிந்தது.

அந்த நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

டாக்டர் செமேகே, ஜனவரி 2024 இல் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்