முல்லைத்தீவில் கோயில் கேணியில் மூழ்கி பலியான மாணவிகளின் கடைசி நேரம் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவில் குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் ஆலய கேணிக்குள் இறங்க மேலயிருந்து மற்றுமொரு மாணவி காணொளி பதிவு செய்தார்.
உயிரிழந்த முல்லைத்தீவு மாணவிகளின் இறுதி நொடி; வெளியான காணொளி | Final Video Of The Deceased Mullaitivu Students
இதன் போது நீருக்குள் இறங்கிய இருமாணவிகளும் கேணிக்குள் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து கரையில் இருந்த மாணவியின் கூக்குரல்கேட்டு ஓடிவந்த அயலவர்கள் நீரில் மூழ்கிய மாணவிகளை ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் ஆவார்.
இந்நிலையில் மாணவிகளின் மரண
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகி இவ்வாறான ரீல்ஸ் மோகம் உயிரையும் பறித்து விடுகின்றது என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.