உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் சம்பவ இடந்திலேயே உயிரிழந்துள்ளதுடள் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.