பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் அறிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார். இந்தியத் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதேவேளை “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த நீண்ட இரவுப் பேச்சுவார்த்தைகளின்” விளைவாக இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.