தனக்கு அழகான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள்? நீங்கள் சரும பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் சருமத்தை சிறப்பாக வைத்திருக்கும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறீர்களா?
ஆனால் இளமையான, உறுதியான சருமத்திற்கான ரகசியம் கொலாஜனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? கொலாஜன் என்பது நம் உடலில் இருக்கும் ஒரு புரதம். இது இளமை மற்றும் ஆரோக்கியமான, நெகிழ்ச்சித்தன்மை மிக்க சருமத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது. நம் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க, சருமம் ஈரப்பதமாக இருக்க மற்றும் பொலிவை பெற என பல வகைகளில் கொலாஜன் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.