உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

ரஷ்யா இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா முடுக்கிவிட்டிருக்கிறது. குறிப்பாக கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது. வானில் ஏவுகணை, டிரோன் குண்டுவெடிப்புகள் ஒளிர்ந்தபடி இருந்தன.

இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டது. இதில் 23 பேர் காயம் அடைந்தமை தெரியவந்துள்ளதாக உக்ரைன் மேலும் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும்போது, “சைரன்கள் அலறிக்கொண்டே இருந்ததால் இது ஒரு கடினமான இரவாக அமைந்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது” என்றார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் இரு முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக